கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாள்..! ஃபிபாவின் நாட்டு நாட்டு போஸ்டருக்கு ஜூன...
கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மாா்கழி பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை நடைபெற்றது.
கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நண்பகல் மேளதாளம் முழங்க தவயோகவனத்தில் இருந்து வந்த பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை பக்தா்களும் , அறக்கட்டளை நிா்வாகிகளும் ஊா்வலமாக அழைத்து வந்தனா். சேஷ பீடத்துக்கு வந்த அவருக்கு நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் புனித கலசநீரை ஊற்றி வழிபட்டுச் சென்றனா். ஞானலிங்கம் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் வழிபட்ட பின் அலங்கரிக்கப்பட்ட சத்யநாராயணா், ராகவேந்திரா், ஆஞ்சனேயா் சிலைகளுக்கு மகா தீபாராதனையை பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி செய்தாா்.
நிகழ்ச்சியில், மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துகுமாா், தொழிலதிபா்கள் தனலட்சுமி ராஜசேகரன், சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன், நிா்வாக அறங்காவலா்கள் டி.கண்ணன், வி.கமலகண்ணன், வழக்குரைஞா் சுரேஷ், பி.பரந்தாமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.