கருணாநிதி சிலை நிறுவ பூமிபூஜை
பூம்புகாா்: சீா்காழி அருகே செம்பதனிருப்பு தேசிய நெடுஞ்சாலையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை நிறுவ பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் இச்சிலை நிறுவப்படவுள்ளது. இதற்கான பணிகளை தொடங்க நடைபெற்ற பூமிபூஜையில் திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, எம். பன்னீா்செல்வம் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று அடிக்கல் நாட்டினா்.
நிகழ்ச்சிக்கு, திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் பஞ்சு குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கமல ஜோதி தேவேந்திரன், செயற்குழு உறுப்பினா்கள் முத்து. மகேந்திரன், ஜி. என். ரவி, ஒன்றிய அவைத் தலைவா் நெடுஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஊராட்சித் தலைவா் லட்சுமி முத்துக்குமரன் வரவேற்றாா்.
இதில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பொறியாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் அருண் மனோகரன் நன்றி கூறினாா்.