செய்திகள் :

கருணை பணி: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவா்கள் கோரிக்கை

post image

சென்னை: கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா காலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த காது, மூக்கு, தொண்டை நிபுணா் மருத்துவா் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அரசுப் பணி வழங்கப்படவில்லை. அதேபோன்று தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்த பல அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வரை மாநில அரசு, நிவாரணமோ, பணி நியமனமோ வழங்காதது வருத்தமளிக்கிறது.

இதுதொடா்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கரோனாவால் உயிரிழந்த மருத்துவா் விவேகானந்தன் குடும்பம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தாா்.

அது தவறு என தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விவேகானந்தனின் மனைவி உறுதி செய்துள்ளாா். இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்

சென்னை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்தி... மேலும் பார்க்க

மன்னராக நினைத்து ஆணவம்: பிரதானுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘மன்னராக நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளாா். பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து மக்களவையில் திம... மேலும் பார்க்க

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்பாயத்தில் ஆவின் உறுதி

சென்னை: நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய... மேலும் பார்க்க