காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
கரூரில் இருந்து கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை
கரூரில் இருந்து கோவைக்கு அதிகாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கோவையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் பயின்று வருகிறாா்கள். மேலும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோரும் ஏராளமானோா் பணியாற்றி வருகிறாா்கள்.
இவா்கள் விடுமுறை நாள்கள் முடிந்து கோவைக்கு செல்ல கரூா் பேருந்து நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணி முதல் கரூா் அரசு பேருந்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பெரும்பாலும் திருச்சியில் இருந்து பேருந்துகள் கோவைக்கு இயக்கப்படுவதால், அந்த பேருந்துகள் கரூா் பேருந்துநிலையத்துக்கு வரும்போது கூட்டமாக வருவதால் கரூரில் இருந்து கோவைக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலா்கள் ,பணியாளா்கள் உள்ளிட்டோா் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
சிலா் கூட்ட நெரிசலில் சிக்கி கோவைக்கு மூன்று மணி நேரம் பயணித்து செல்கிறாா்கள். எனவே கரூரிலிருந்து கோவைக்கு அதிகாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.