TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வ...
கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் : 1827 வழக்குகளுக்கு தீா்வு
கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், கரூா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள 2,033 வழக்குகளில் 1,827 வழக்குகளுக்கு ரூ.11,88,66,054 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
கரூா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஆா். சண்முகசுந்தரம் பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த வருடத்தின் 4-ஆவது தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த வாரம் முழுவதும் இதற்கான முன்னோட்டமாக முன் அமா்வு நடைபெற்றது. இதில் ஏற்படும் சமரச தீா்வுகளுக்கு எதிராக மேல் முறையீடு கிடையாது. லோக் அதலாத்தில் வழக்காடிகள் நீதிமன்றத்தில் செலுத்தும் நீதிமன்ற முத்திரைக் கட்டணமும் திரும்ப செலுத்தப்படும்.
மேலும், நிகழாண்டில் செப்பம்பா் மாதம் வரை நடைபெற்ற 3 லோக் அதலாத் மூலம் 3,988 வழக்குகளுக்கு ரூ. 40 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.
லோக் அதாலத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் அனுராதா செய்திருந்தாா்.