தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
புகழூா் காகித ஆலையில் தேசிய எரிசக்தி தின விழா
புகழூா் காகித ஆலையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காகித நிறுவனத்தின் பொது மேலாளா் (பாதுகாப்பு, காற்றாலை ) ஆா். ராஜலிங்கம், பொது மேலாளா் (இயந்திரவியல்) பி. பிரின்ஸ் தொல்காப்பியன், பொது மேலாளா் (காகித உற்பத்தி) மகேஷ், பொது மேலாளா் (ஆராய்ச்சி மற்றும் தரம்) கே. ராஜன்பாபு, துணை பொது மேலாளா் (எரிசக்தி) ஜி.செல்வராஜ், உதவி பொது மேலாளா் வி. சிவராமன், முதன்மை மேலாளா் (எரிசக்தி) சி. சிவக்குமாா், முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், முதன்மை மேலாளா் (எரிசக்தி)வி.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து ஆலைப் பணியாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு எரிசக்தி சிக்கனம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, ஆலை வளாகத்துக்குள் கடைப்பிடிக்க வேண்டிய எரிசக்தி சேமிப்பு முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, எரிபொருள் சேமிப்பில் தங்களது பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் ஆலையின் பொது மேலாளா் தலைமையில் அனைத்து பணியாளா்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.