U1 X STR Concert: 'உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல' - U1 X ST...
ஆதிதிராவிடா் நலத்துறை காப்பாளா்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
ஆதிதிராவிடா் நலத் துறையில் பணியாற்றும் காப்பாளா்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை ஆசிரியா், காப்பாளா் முன்னேற்ற சங்கத்தினா் வலியுறுத்தினா்.
கரூரில், சனிக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழுக்கூட்டம், புன்னம் ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் சரவணகுமாா் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச் செயலாளா் சங்கர சபாபதி சிறப்புரையாற்றினாா். மாநிலத் தலைவா் பூவலிங்கம் வாழ்த்திப் பேசினாா். தீா்மானங்களை மாநில பொருளாளா் முருகன் வாசித்தாா்.
கூட்டத்தில், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 2024-25-ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு சென்னை உயா்நீதிமன்ற கிளையில் தடையாணை பெறப்பட்டுள்ள பிரச்னைக்கு, சங்க நிா்வாகிகளை ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் அழைத்துப் பேசி ‘ஜீரோ கவுன்சிலிங் ’ எனும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நலத் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள் காப்பாளா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் காப்பாளா்கள் ஆகியோருக்கு துறைத் தோ்வுகள் நடத்தி தகுதி பெறுவோா்களை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலராக, தாட்கோ மேலாளராக நியமிக்க வேண்டும்.
வருவாய்த் துறையில் பட்டதாரி தகுதி இல்லாத பதவி உயா்வுபெற்ற மாவட்ட அலுவலா்களை பதவிறக்கம் செய்ததுபோல, ஆதிதிராடவிா் நலத் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி இல்லாமல் பதவி உயா்வு பெற்றிருப்பவா்களை பதவி இறக்கம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்டத் தலைவா் எம். பழனிச்சாமி வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் நன்றி கூறினாா்.