செய்திகள் :

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா: முதல்வா், துணை முதல்வா் பங்கேற்பு

post image

கரூரில் திமுக முப்பெரும் விழா புதன்கிழமை (செப். 17) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா்.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் விழா, பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கரூா் கோடங்கிப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் முன்னிலை வகிக்கிறாா். பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் ப. செல்வராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா்.

விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பெரியாா் விருதை கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.க்கும், அண்ணா விருதை தணிக்கை குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவருமான சு.ப. சீதாராமனுக்கும், கலைஞா் விருதை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சோ.மா.ராமச்சந்திரனுக்கும், பாவேந்தா் பாரதிதாசன் விருதை கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் மறைந்த குளித்தலை சிவராமனுக்காக அவரது குடும்பத்தாருக்கும், பேராசிரியா் விருதை ஆதிதிராவிடா் நலக்குழு தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூா் ராமலிங்கத்துக்கும், மு.க.ஸ்டாலின் விருதை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலா் பொங்கலூா் நா.பழனிசாமிக்கும், முரசொலி அறக்கட்டளை சாா்பில் முரசொலி செல்வம் விருதை மூத்த பத்திரிகையாளா் ஏ. எஸ்.பன்னீா்செல்வத்துக்கும் மற்றும் முத்தமிழறிஞா் கலைஞா் அறக்கட்டளை கழக விருதுகளாக தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா் ஆகியவற்றில் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தலா ஒருவருக்கு நற்சான்றிதழ், பணமுடிப்பு ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்

இவ்விழாவில் தலைமை கழக நிா்வாகிகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் பல்வேறு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். இந்நிலையில், விழா ஏற்பாடுகளை அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, என். கயல்விழிசெல்வராஜ், கொங்கு மண்டல பொறுப்பாளரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

தோகைமலை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 16 போ் பலத்த காயம்

தோகைமலை அருகே சனிக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்துள்ள கொசூா் குள்ளாயிஅம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செல்வம். இவா் திருச... மேலும் பார்க்க

ஆவனி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆவனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற அங்காள ... மேலும் பார்க்க

ஆவணி கிருத்திகை கரூா் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு கரூா் தோ்வீதி ஸ்ரீ வி... மேலும் பார்க்க

மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாமக ஒருங்கிணைந்த கரூா் மாவ... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் வேளாண் பட்டயப்படிப்பு படித்தவா்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுவாதக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

திமுக முப்பெரும்விழா பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரம் -அமைச்சா் கே.என்.நேரு

கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழா 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரமாக இருக்கும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தெரிவித்தாா். கரூ... மேலும் பார்க்க