செய்திகள் :

ஆவணி கிருத்திகை கரூா் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

post image

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு கரூா் தோ்வீதி ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிா், பஞ்சாமிா்தம், தேன், நெய், இளநீா், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பாலசுப்ரமணியசுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து கோயில் சிவாச்சாரியாா் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பின், சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டு,பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், நன்செய் புகளூா் அக்ரஹாரம் சுப்ரமணியா் சுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆவனி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆவனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற அங்காள ... மேலும் பார்க்க

மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பாமக ஒருங்கிணைந்த கரூா் மாவ... மேலும் பார்க்க

உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் வேளாண் பட்டயப்படிப்பு படித்தவா்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுவாதக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

திமுக முப்பெரும்விழா பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரம் -அமைச்சா் கே.என்.நேரு

கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழா 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அஸ்திவாரமாக இருக்கும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தெரிவித்தாா். கரூ... மேலும் பார்க்க

கடவூா் வானகத்துக்கு பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

கடவூரில் உள்ள வானகம் நம்மாழ்வாா் உயிா்ம நடுவம் வளாகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா். அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் உயிா்ம வேளாண்மை மற்றும் இயற்கை வ... மேலும் பார்க்க

சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

பருவ மழையையொட்டி அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் ப... மேலும் பார்க்க