செய்திகள் :

கரூர் மரணங்கள்: ``ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று" - கனிமொழி

post image

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழியும் நேற்று (செப்.29) கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

இந்த நிலையில் இன்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கரூர் சம்பவம் குறித்து பேசினார்.

அப்போது கனிமொழி, "கரூரில் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடந்திருக்கக்கூடாது. யாரையும் குறை சொல்லும் நேரம் இது இல்லை.

ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் அங்கிருந்து செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று. வன்முறையைத் தூண்டுவது உச்சக்கட்ட பொறுமையின்மை.

சமூக வலைதளங்கள் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ரணம், காயம் இன்னும் இருக்கக்கூடிய இடத்தில் தவறான விஷயங்களை சொல்லி அவர்களுக்கு மேலும் மேலும் வலிகளை ஏற்படுத்தக் கூடாது.

உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றது தி.மு.கதான். மக்களின் உயிர்தான் முக்கியமான விஷயம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாகச் செயல்பட வேண்டும். விசராணையில் உண்மை வெளிவரும். யார் மீது தவறு இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லாக் கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கிறோம்.

ஆனால், அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. இதைப் பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது" என்று கூறினார்.

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துற... மேலும் பார்க்க

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா: "விரைவில் அவர்களைச் சந்திப்போம்" - செய்தியார்களிடம் ஆதவ் பேசியதென்ன?

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க

அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!

இந்த செப்டம்பர் மாதம் நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக இந்தியா மற்றும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம். செப்டம்பர் 3 - ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இதுவரை இருந்த 5%, 12... மேலும் பார்க்க

தவெக விஜய்: "நம்மால் நடந்துவிட்டதென்ற குற்ற உணர்ச்சியால் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்" - ஆ.ராசா MP

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து பெருந்துயரம் ஏற்பட்டது.கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் ஸ்டாலின் மு... மேலும் பார்க்க