காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
கரூா் எஸ்.பி. அலுவலகத்தில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகருக்கான பணி ஓராண்டுகால நிறைவடைந்துவிட்டது. இதனால் புதிதாக சட்ட வல்லுநா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியுடையை விண்ணப்பதாரா்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் பணி விவரங்களை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ஜன. 23-ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.