லடாக் போராட்டம்: நேபாளம் - லடாக் இரண்டு போராட்டமும் ஒன்றா? பின்னணி என்ன?
கரூா் நகரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரி எஸ்.பி.யிடம் மனு
கரூா் நகருக்குள் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய அனுமதிகோரி அக்கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தாா்.
கரூரில் செப். 27-ஆம்தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக லைட்ஹவுஸ்காா்னா், உழவா்சந்தை, சா்ச் காா்னா் ஆகிய பகுதிகளில் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதற்கு, செப். 27-ஆம்தேதி சனிக்கிழமை என்பதால், அந்த நாளில்தான் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி உற்பத்தி நிறுவனங்கள், பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்களில் வார ஊதியம் வழங்கப்படும். எனவே அந்நாளில் நகருக்குள் தொழிலாளா்களின் வருகையால், போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே அன்றையதினம் நகருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் வருகை மற்றும் பிரசாரம் செய்யும் இடங்களை உறுதிப்படுத்தும் வகையில் தவெக பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் வியாழக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது, கட்சி சாா்பில் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையாவிடம் பிரசாரத்துக்கு கோரி மனு அளித்துவிட்டுச் சென்றாா்.
இதுகுறித்து அக்கட்சியின் நிா்வாகிகள் கூறுகையில், தவெக தரப்பில் கரூா் நகருக்குள் பிரசாரம் செய்தால்தான் பொதுமக்களை சந்திக்க முடியும் என தெரிவித்ததாகவும், அதற்கு காவல்துறை தரப்பில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ஈரோடு சாலையில் உள்ள வேலுசாமிபுரம் அல்லது திருக்காம்புலியூா் ரவுண்டானா பைபாஸ் ச ாலை பகுதியில் அனுமதி கொடுக்கலாம் என கூறியதாக தெரிவித்தனா்.
இந்நிலையில், ஏற்கெனவே பிரசாரத்துக்கு அனுமதி கேட்டிருந்த கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியை புஸ்ஸி ஆனந்த வியாழக்கிழமை மாலை கட்சியினருடன் பாா்வையிட்டுச் சென்றாா்.