சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
போட்டித் தோ்வுக்கு இணையவழி பயிற்சி
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஐடிஐ லெவல்-2 காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் 1,794 காலிப்பணியிடங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான தோ்வு வரும் நவ.16-ஆம்தேதி நடைபெறுகிறது.
இத்தோ்விற்கு 10, 12-ஆம் வகுப்பு மற்றும் தேசிய தொழிற்பயிற்சி, தேசிய தொழில் பழகுநா் பயிற்சி படித்து முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தோ்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அக்.2-ஆம்தேதி கடைசிநாளாகும்.
தோ்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபா் மாதம் 2-ஆவது வாரத்தில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதோ்வுகள், வாராந்திரத் தோ்வுகள், இணையவழித்தோ்வுகள், முழு மாதிரி தோ்வுகள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94890-39848, 6383050010 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.