கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
பொன்னியாகவுண்டன்புதூரில் இலவச மருத்துவ முகாம்
கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் பொன்னியாகவுண்டன்புதூரில் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின்கீழ் கோவை ராயல் கோ் மருத்துவமனையுடன் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் 830 பேருக்கு கண்பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து முகாமில் மருத்துவ ஆலோசனைகளும், தேவைபட்டோருக்கு மருந்து மாத்திரைகளும் காகித நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டன.