கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்
வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவருகின்றனா். தற்போது பொங்கல் விடுமுறையாக திங்கள்கிழமை முதல் 4 நாட்களுக்கு விடப்பட்டுள்ளதால் வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தொடா் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டனா்.
இதனால் கருா் பேருந்துநிலையம், ரயில்நிலையம் ஆகிய இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்பதிவு இல்லாத ரயில்பெட்டிகளில் கூட்டம் வழக்கம்போல் நிற்கக் கூட இடமின்றி காணப்பட்டது.