உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி! வெளியானது சூப்பர் அறிவிப்பு!
கரூா் மாவட்டத்தில் மாா்ச் 23-இல் சிறப்பு கிராம சபை கூட்டம்
உலக தண்ணீா் தினத்தையொட்டி மாா்ச் 23 ஆம் தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றிவிவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, கிராம ஊராட்சி பொதுமக்கள்அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.