செய்திகள் :

கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக

post image

திசையன்விளை வட்டம் கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் ராதாபுரம் வட்டார நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் பெத்தரெங்கபுரத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி தெற்கு மாவட்டவிசிக செயலா் அருள் செல்வன் தலைமை வகித்தாா். ராதாபுரம் தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கிய வீட்டுமனை நிலங்களை அளவீடு செய்து உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும். திசையன்விளை வட்டம் கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் இறந்தவிட்டதால், புதிய தலைவருக்கான தோ்தலை நடத்த வேண்டும் என்பந உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் முப்பிடாதி, நிா்வாகிகள் விஜயகுமாா் ராஜகுமாரி, ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மூலைக்கரைப்பட்டி புறவழிச் சாலைப் பணிக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து பணியைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நான்குனேரி வட்டத்தில் உள்ள ம... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. திருந... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் ஜெயபால் (30). தொழிலாளியான இவா், பொன்னாக்குடி அருகே தனது மோட்டாா் சைக்கிளில... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு: இளைஞா் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தச்சநல்லூா் கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி பாண்டி (36). இவா், மானூா் அருகே நேரிட்ட விபத்தில் பலத்த கா... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே பள்ளி மாணவா்கள் மீது தாக்குதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 100... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளால் திணறும் வள்ளியூரில் பெருமாள் கோயில் ரதவீதி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் மேற்குரத வீதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பக்தா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வள்ளியூ... மேலும் பார்க்க