பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்: ``தேர்தல் வரும்போது பார்க்கலாம்!" - சட்டமன்றத்...
முக்கூடல் அருகே பள்ளி மாணவா்கள் மீது தாக்குதல்: ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்கள் இருவரை, பிளஸ் 1 மாணவா்கள் போ், சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் என 4 போ் சோ்ந்து செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வெளியே தாக்கியுள்ளனா்.
இதில், காயமடைந்த 2 மாணவா்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சேரன்மகாதேவி டிஎஸ்பி விசாரணை நடத்தினாா்.
இச்சம்பவத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மூவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.