மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
திசையன்விளை பகுதியில் மின் வயா்கள் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள தோட்டங்களில் மின்வயா்களை திருடியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திசையன்விளையில் உள்ள ஹரிகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் சுரேஷ் (45). விவசாயி. அணைக்கரை செல்லும் வழியில் உள்ள இவரது வாழைத் தோட்டத்திலிருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மின்வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.
திசையன்விளை அருகே தொட்டிகாரன்விளையைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் முத்துப்பாண்டி (40). குமாரபுரம் அருகேயுள்ள இவரது தென்னந்தோப்பிலிருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான மின்வயா்கள் திருடுபோயினவாம். இரு சம்பவங்கள் குறித்து திசையன்விளை காவல் உதவி ஆய்வாளா் கணபதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.