செய்திகள் :

`கர்னல் சோபியாகுரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை' - நீதிமன்றம் சொன்னதென்ன?

post image

தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி நாட்டுக்கு எடுத்துரைத்த ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக மத்தியப் பிரதேச மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான விஜய் ஷா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய பிரதேசம் மாநில உயர் நீதிமன்றம்.

நீதிபதி அதுல் ஶ்ரீதரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தியிருக்கிறது.

Operation Sindoor

"என்ன சூழ்நிலையானாலும் இன்னும் சில மணிநேரங்களில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும்" என நீதிமன்றம் கூறியுள்ளது.

என்ன பேசினார் பாஜக அமைச்சர்

கடந்த செவ்வாய் அன்று அரசு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, பிரதமர் மோடி பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுக்க அவர்களது சொந்த சகோதரியை அனுப்பியதாக குறிப்பிட்டு பேசினார்.

"மோடிஜி நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறார். எங்கள் மகள்களை விதவையாக்கிவர்களுக்கு பாடம் கற்பிக்க அவர்களின் சகோதரியையே அனுப்பினோம்" என்று பேசினார் விஜய் ஷா.

விஜய் ஷா மீதான வழக்கு மே 15-ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்படவிருக்கிறது. அவர்மீது மக்களுக்கு இடையே பகையமை உருவாக்கியற்கான பிரிவு 196 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"பாஜக மௌனமாக இருப்பது ஏன்" - காங்கிரஸ் கேள்வி

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, தான் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

ராணுவக் கர்னல் சோபியா குரேஷி
ராணுவக் கர்னல் சோபியா குரேஷி

"பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ராணுவ வீரர்களின் வீரத்தை வணங்குவதாகக் கூறினார். ஒட்டுமொத்த நாடும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றதாக பெருமைபட்டார். ஆனால் இங்கே ஒரு பாஜக அமைச்சர் ராணுவ அதிகாரியை இழிவாக பேசுகிறார். இதைக் கேட்டுக்கொண்டு பாஜக மௌனமாக இருப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஜித்து பத்வாரி.

மேலும், "இன்னும் 24 மணிநேரத்துக்குள் அவர் பதவி விலக வில்லை என்றால் நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காங்கிரஸ் சார்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வோம்" என்றும் பேசியிருக்கிறார்.

Doctor Vikatan: 25 வயதில் பலூன் போல வீங்கியிருக்கும் தொப்புள்.. அறுவை சிகிச்சை தான் தீர்வா?

Doctor Vikatan: `பிறந்ததும் தொப்புள் சரியாக மூடப்படவில்லை அல்லது தானாக மூடவில்லை என்றால், பின்னாளில் பிரச்னையாகி அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும்' என்கிறார்கள். 25 வயதில்கூட பிரச்னை வரலாம் என்கிறார்க... மேலும் பார்க்க

`எங்களுக்கு எதிரான வன்மம், ஸ்டாலின் DNA-விலேயே உள்ளது..' PMK BALU Interview

பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதில் ஓபனாகவே கடுமை காட்டி இருந்தார் ராமதாஸ். கட்சியினருக்கு பாடம் எடுத்திருந்தார். அது அன்புமணிக்கு எதிரான பேச்சு என்றும் பேசப்... மேலும் பார்க்க

INDIA - PAKISTAN பிரச்னை : America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP| Imperfect Show 14.5.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* “என் தலையீட்டால்தான் இந்தியா - பாக் தாக்குதல் நிறுத்தப்பட்டது” - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு.* அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு?... மேலும் பார்க்க

ஊட்டியில் உற்சாகம் காட்டிய முதல்வர் ஸ்டாலின்! | Photo Album

ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் ம... மேலும் பார்க்க

UK: புதிய விசா நடைமுறைகள்; கடினமாகும் லண்டன் கனவு.. இந்தியர்களுக்கு வரும் பாதிப்புகள் என்ன?

வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், குடியேற்ற கொள்கைகளில் பல மாறுதல்களை மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை... மேலும் பார்க்க