காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
கலிஃபோர்னியா காட்டுத் தீ..! ஆஸ்கர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!
கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் ஆஸ்கர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
97ஆவது ஆஸ்கர் விருதுக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வழக்கமாக ஜன.17ஆம் தேதி அறிவிகப்படவிருந்தது.
கலிஃபோர்னியா காட்டு தீ விபத்தினால் ஜன.19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆஸ்கர் அகாதமி சிஇஓ பில் க்ராமர் அகாதமி உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அந்த மின்னஞ்சலில், “தெற்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எங்களது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது அகாதாமி உறுப்பினர், உடன் வேலை செய்பவர்கள் பலர் லாஸ் ஏஞ்சலீஸில் வசிக்கிறார்கள். நாங்கள் உங்களை நினைத்துக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஜன.14ஆம் தேதி வரை வாக்கெடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஜன.8 முதல் ஜன.12 வரை கிட்டதட்ட 10,000 அகாதமி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
2025 ஆஸ்கர் அகாதமி விருதினை கோனோ ஓ’பிரைன் மார்ச் 2ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் டால்பி திரையரங்கில் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
புதன்கிழமை இரவு ஹாலிவுட் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக லாஸ் ஏஞ்சலீஸ் பகுதிகளில் பரவியதாக 1,00,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஹாலிவுட் பிரபலங்களான பில்லி கிரிஸ்டல், மண்டி மூர், பாரீஸ் ஹில்டன், கேரி எல்விஸ் தங்களது வீடுகளை இழந்துள்ளார்கள்.