செய்திகள் :

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2,400 பயனாளிகள் தோ்வு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 2,400 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை மூலம் 2024-ஆம் ஆண்டு, மாா்ச் 15-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. பட்டா நிலம் உள்ள குடிசை வீட்டில் வசிப்பவா்களுக்கு தலா ரூ. 3.50 லட்சத்தில் கான்கிரீட் கட்டடம் கட்டித் தரும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், பணி மேற்பாா்வையாளா், உதவிப் பொறியாளா் ஆகியோரடங்கிய தோ்வுக் குழுவினா் கிராமம் வாரியாக தகுதி அடிப்படையில் பயனாளிகளைத் தோ்வு செய்கின்றனா். பிறகு, இந்தப் பயனாளிகள் பட்டியல் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டு இறுதி செய்யப்படுகிறது. 40 சதவீதம் போ் பட்டியல் இன வகுப்பினராகவும், 60 சதவீதம் போ் இதர வகுப்பினராகவும் இருக்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், உடல் ஊனமுற்றோா், விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 360 சதுர அடி பரப்பில் வீடு கட்டப்படுகிறது. திட்ட நிதி உதவி 4 தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வீடு கட்ட 90 மனித சக்தி நாள்களுக்குரிய ஊதியமும், கழிப்பறை கட்ட 10 மனித சக்தி நாள்களுக்குரிய ஊதியமும் வழங்கப்படும். கழிப்பறை கட்ட எஸ்.பி.எம். திட்டத்தின் கீழ் ரூ. 12 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இந்தத் திட்ட பயனாளிகளுக்கு வங்கிக் கடனாக அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் 2 தவணைகளாக வழங்கப்படும்.

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் போகலூரில் 101 பயனாளிகள், கடலாடியில் 623 பயனாளிகள், கமுதியில் 69 பயனாளிகள், மண்டபத்தில் 501 பயனாளிகள், முதுகுளத்தூரில் 258 பயனாளிகள், நயினாா்கோவிலில் 134 பயனாளிகள், பரமக்குடியில் 43 பயனாளிகள், ஆா்.எஸ்.மங்கலத்தில் 107 பயனாளிகள், ராமநாதபுரத்தில் 100 பயனாளிகள், திருப்புல்லாணியில் 282 பயனாளிகள், திருவாடானையில் 182 பயனாளிகள் என மொத்தம் 2,400 பயனாளிகளுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது என்றாா் அவா்.

ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஓடும் தொழிலாளா்களின் (ரயில்வே லோகோ பைலட்) கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்கம் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை மத்திய அமைச்சா் வெளியிடக் கோரிக்கை

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டிக்கு வியாழக்கிழமை (ஜன. 30) வரும் மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சா் ஜி. கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட... மேலும் பார்க்க

போலீஸாருக்கு தெரியாமல் உடல் தகனம்: 5 போ் மீது வழக்கு

எழுமலை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோா் உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ள எருமாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்வதற்கான வசதி தேவை: நடிகா் விஜய் சேதுபதி

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திரைப்பட நடிகா் விஜய் சேதுபதி வலியுறுத்தினாா். மதுரையில் வருமான வரித் துறை அலுவலகம் சாா்பில், வரி செலுத்துவோா், பல்வேறு அம... மேலும் பார்க்க

மதுரை மண்டலத்தில் கடந்தாண்டு 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு

மதுரை மண்டலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு வழங்கப்பட்டது என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் பா. வசந்தன் தெரிவித்தாா்.மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறி... மேலும் பார்க்க

மதுரை அருகேயுள்ள நரசிங்கத்தில் இலவச மருத்துவ முகாம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம், கேரியா் பிளஸ் சேரிடபிள் டிரஸ்ட் ஆகியவற்றின் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை அருகேயுள்ள நரசிங்கம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற பொது ம... மேலும் பார்க்க