செய்திகள் :

கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி

post image

2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய விருதான இது, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன், மணிகண்டன், ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர், நிகில் முருகன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இளம் இசையமைப்பாளராகக் கவனம் ஈர்த்து வரும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு கலைமாமனி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவித்திருக்கும் அனிருத், "மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசைக் குழுவினர், அதை விட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் பேச்சு பதில் என்ன?

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பல... மேலும் பார்க்க

"மார்க்குக்காக கொஞ்சம் படிங்க, வாழ்க்கைக்காக நிறைய படிங்க" - சிவகார்த்திகேயன் அட்வைஸ்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்விக்காக தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பிரத்தியேக திட்டங்க... மேலும் பார்க்க

Server Sundaram: ``சுட சுட அப்படியே இருக்கிறது; திரைக்கு வரும், ஆனால்" - ரிலீஸ் குறித்து இயக்குநர்

சந்தானம் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் சர்வர் சுந்தரம்'. திரைப்படம் முடிக்கப்பட்டப் பிறகு சில விஷயங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. சர்வர் ச... மேலும் பார்க்க

"கேப்டன் இருந்திருந்தால் நான் தேசிய விருது வாங்கியதைக் கொண்டாடியிருப்பார்னு சொன்னாங்க" - MS பாஸ்கர்

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு 'பார்க்கிங்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது.டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி ம... மேலும் பார்க்க