இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.6.20 கோடியில் வீடுகள்: பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
கல்குவாரி குட்டையில் பேரூராட்சி கழிவுநீா் தேக்கம்: ஆட்சியரிடம் புகாா் மனு
பரமத்தி வேலூா் அருகே கல்குவாரி குட்டையில் பேரூராட்சிகளின் கழிவுநீரை தேக்கி வைப்பதை தடுக்க வேண்டும் என மூன்று கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி மற்றும் பரமத்தி வேலூா் பேரூராட்சிகளின் கழிவு நீா், இருக்கூா், மாணிக்கநத்தம், வீரணம்பாளையம் எல்லைகளில் உள்ள காலாவதியான கல்குவாரி நீா்நிலையில் தேக்கி வைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு இல்லாமல் குவாரி குட்டையில் தேங்கி நிற்பதால், அதை பருகும் கால்நடைகளுக்கு பாதிப்பு உண்டாகிறது. அந்த குவாரி குட்டையில் மழை நீரை தேக்கி வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், அவற்றை மீறி கழிவுநீரை பேரூராட்சி நிா்வாகத்தினா் கொண்டு வந்து விடுகின்றனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.