ஐபிஎல்லில் விளையாடுவது சர்வதேச வீரர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்! - திலக் வர...
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
மணப்பாறையை அடுத்த தவளைவீரன்பட்டியில் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தவளைவீரன்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி. தேமுதிக ஒன்றிய அவைத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது இளைய மகள் ராகசுதா (22). திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தாா்.
தோட்டத்துக்கு சென்றிருந்த தாய் முத்துலெட்சுமி வீடு திரும்பிய நிலையில், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ராகசுதாவின் உடலை மீட்டனா்.
தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை: மணப்பாறையை அடுத்த கீழகுறிச்சிபட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி சரசு (29). குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பதிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாம். வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், வீட்டை விட்டு வெளியேறிய சரசு, அருகிலுள்ள தங்கம் என்பவரது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலின்பேரில் வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].