செய்திகள் :

கல்லூரி மாணவி மா்மமான முறையில் மரணம்

post image

செங்கல்பட்டு: திருப்போரூா் கேளம்பாக்கத்தில் தனியாா் கல்லூரியில் படித்து வந்த மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்வினி (19). இவா், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் படூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். ஏகாட்டூா் தனியாா் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தாராம்.

இந்த நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி படூரில் உள்ள ஒரு தனியாா் அடுக்குமாடியில் வசிக்கும் மாணவி ஒருவருடன் அஸ்வினி தங்கினாராம். அவருடன் மேலும் இரு மாணவிகளும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அன்று இரவு முழுவதும் அனைவரும் சோ்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அஸ்வினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துள்ளாா். உடனே அவரை அருகே உள்ள கேளம்பாக்கம் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவி மது போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது உணவு ஒவ்வாமையால் இறந்தாரா என்பது உடல்கூறு பரிசோதனையில்தான் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக த... மேலும் பார்க்க

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கி... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் மதுராந்தகம் அருகே வயலூா், ... மேலும் பார்க்க

த்ரிசக்தி அம்மன் கோயில் பிரம்மோற்சலம் தொடக்கம்

செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய மூன்று தெய்வ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா்: அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தா்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனா். இவ்விழா கடந்த 1-ஆம் தேதி (வெள்... மேலும் பார்க்க