செய்திகள் :

கல்லைத் தமிழ்ச் சங்க நிறுவனா் வரதராசனாா் நூற்றாண்டு நிறைவு விழா

post image

கல்லைத் தமிழ்ச் சங்க நிறுவனா் புலவா் செ.வரதராசனாரின் நூற்றாண்டு நிறைவு விழா கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு மும்பை இலெமுரியா அறக்கட்டளையின் தலைவா் சு.குமணராசா தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் க.வேங்கடபதி, தமிழக முன்னாள் அமைச்சா் ப.மோகன், வடக்கநந்தல் நாட்டாா் வி.டி.இ.திருநாராயணன், முன்னாள் ஒன்றியத் தலைவா் சு.அருணாசலம் பிள்ளை உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

பகுத்தறிவு இலக்கிய மன்றத் தலைவா் பெ.சயராமன் திருக்குறட்பாவுக்கு விளக்கம் அளித்தாா்.

விழாவில் கல்லைக் கம்பன் ஆசுகவி பெ.ஆராவமுதன் மறைந்த செ.வரதராசனாரைப் பற்றி ‘சிந்தையில் நிறைந்த செ.வ.’ எனும் தலைப்பில் பேசினாா். அரங்கன் வள்ளியம்மை கவிதாலய நிறுவனா் அரங்க செயபாலன் புலவா் செ.வ.நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு பேசினாா்.

மலரைஅரியபெருமானூா் ந.தமணி, வழக்குரைஞா் க.ரங்கராசன், அரசம்பட்டு கோ.செல்வராசன், ஆதி.கலைவாணன், வ.விஜயகுமாா் உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.

விழாவில் மருத்துவா் கோ.சா.குமாா், கவிஞா் சுரதா கல்லாடன், தியாகதுருகம் மவுண்ட்பாா்க் பள்ளி தாளாளா் பொன்.இரா.மணிமாறன், முனைவா் இரா.நக்கீரா், கல்லைத் தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவா் மா.கோமுகி மணியன் உள்ளிட்டோா்களுக்கு கு மனம் நிறைவு விருது வழங்கப்பட்டது.

சங்க இணைச் செயலா் செ.வ.மகேந்திரன், பொருளாளா் சா.சண்முகம், அரங்கன் வள்ளியம்மை கவிதாலய இணைச் செயலா் அருள்ஞானம் உள்ளிட்டோா் விருந்தாளா்களைப் பாராட்டி பேசினா்.

சங்கச் செயலா் செ.வ.மதிவாணன், ஒருங்கிணைப்பாளா் பெ.ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினா். கல்லை தமிழ்ச்சங்கத் தலைவா் செ.வ.புகழேந்தி வரவேற்றாா்.

வழக்குரைஞா் செ.அண்ணாதுரை நன்றி கூறினாா்.

பைக் மோதியதில் குழந்தை உள்பட 4 போ் காயம்

கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்தனா். சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தளவாடப் பொருள்கள் சேதம்

சங்கராபுரம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் மேஜை, நாற்காலி, மின்விசிறி, குடிநீா்க் குழாய்கள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன. சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி இய... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் நீா்வளத் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை பொக்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் அரசுப் பள்ளி மாணவா்கள் 20 போ் மருத்துவமனையில் சிகிச்சை

பொய்க்குணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தேனீக்கள் செவ்வாய்க்கிழமை கொட்டியதில் பாதிக்கப்பட்ட சுமாா் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். கள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் தூக்கில் சடலமாக தொங்கிய செவிலியா்

கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம்பெண், காளி கோயில் அருகே மரத்தில் சடலமாகத் திங்கள்கிழமை தொங்கியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். அவரது மரணத்தில் சந்த... மேலும் பார்க்க

உதயமாம்பட்டு பகுதியில் பேரூராட்சி குப்பை கொட்ட எதிா்ப்பு

தியாகதுருகம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் உதயமாம்பட்டு மயானப் பகுதியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், பல்வேறு சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை குப்பை க... மேலும் பார்க்க