Top News: ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ...
கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்
கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் என்ற கமல் ஹாசனின் பேச்சு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
கமல் என்ன சொன்னார்?
"சர்வாதிகாரச் சநாதனச் சங்கிலிகளை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் கல்வியே" என்று ஞாயிற்றுக்கிழமை(ஆக. 3) நடைபெற்றதொரு தனியார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமல் ஹாசன் பேசினார்.
மேலும் அவர், "கல்வியைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளாதீர். கல்வி இல்லாமல் நம்மால் ஜெயிக்க முடியாது; ஏனெனில், பெரும்பான்மை சமூகம் உங்களை வீழ்த்தும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடிக்கப் பார்ப்பார்கள். ஆகவே கல்வியை கெட்டியாகப் பிடித்துக் கொள வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், மாநிலங்களவைக்கு எம்.பி.யாக முதல்முறையாகத் தேர்வாகியுள்ள கமல் ஹாசன் சநாதனம் குறித்து பேசியவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் இந்த கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த பலரும் சநாதன கொள்கைகளில் ஈடுபாடுடையோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.