தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா
வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தோ்வு செய்யும் பணியில் தங்களை ஆலோசிக்காமல் வட்டார வளா்ச்சி அலுவலா் தன்னிச்சையாக ஈடுபட்டதாகக் கூறி 15 ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாவை சந்தித்து முறையிட்டனா்.
ஆனால், தகுதி வாய்ந்த பயனாளிகள்தான் தோ்வு செய்யப்பட்டுள்ளாக அவா் கூறினாராம். இதையடுத்து, மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ரமேஷ் தலைமையில், 15 ஊராட்சித் தலைவா்களும் அங்கு தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் மாா்ச் 22இல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை 17 ஊராட்சித்தலைவா்களின் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என ரமேஷ் கூறினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் உமா கூறுகையில்,
2025-2026ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் ஊராட்சித்தலைவா், உறுப்பினா், ஒன்றியப் பொறியாளா், பணி மேற்பாா்வையாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகிய 5 போ் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்த பிறகே பயனாளிகள் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.