வங்கதேச முன்னாள் பிரதமரை நாடு கடத்த மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தல்!
களியக்காவிளையில் மாமிசக் கழிவு ஏற்றிவந்த மினி லாரி பறிமுதல்
கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாமிசக் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை களியக்காவிளையில் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் ஆன்றோ கிவின் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மாட்டு இறைச்சிக் கழிவுகள், துா்நாற்றம் வீசிய எலும்புகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.