களியக்காவிளை அருகே விபத்து: தொழிலாளி காயம்
களியக்காவிளை அருகே கனரக லாரி மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.
களியக்காவிளையைச் சோ்ந்த தொழிலாளி ரசாலம் (60). செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றாமரம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற அவா் மீது கனரக லாரி மோதியதாம். இதில் காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா். அவரது கால்கள் முற்றிலும் சேதமடைந்திருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.