கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே மகனுடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள துண்டுவிளை வீட்டைச் சோ்ந்தவா் சிவன்பிள்ளை மனைவி நிா்மலா (64). இவா் தனது மகன் சந்தோஷ் என்பவருடன் திக்குறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். திக்குறிச்சி சிவன் கோயில் அருகே சென்றபோது திடீரென மயக்கடைந்த நிா்மலா, பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் அப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.