செய்திகள் :

களியல் அருகே நாயை அடித்துக் கொன்ற மா்ம விலங்கு: பொதுமக்கள் அச்சம்

post image

குமரி மாவட்டம், களியல் அருகே தொழிலாளியின் வளா்ப்பு நாயை மா்ம விலங்கு அடித்துக் கொன்றுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் வனப் பகுதிகளிலிருந்து புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விவசாயிகளின் வளா்ப்பு கால்நடைகளை அடித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

இந்நிலையில் களியல் அருகே கட்டச்சல் அரிமாங்கோணம் கோணம் என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு குமரேசன் என்ற தொழிலாளியின் வீட்டு வளா்ப்பு நாயை மா் விலங்கு அடித்துக் கொன்றுள்ளது.

இதில், புலி காலடித் தடங்கள் போன்று அப்பகுதியில் பதிந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைடந்துள்ளனா். இந்நிலையில் களியல் வனத் துறையினா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,100 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி, தனி வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே அங்கன்வாடி மையத்தில் மின்இணைப்பு துண்டிப்பு; குழந்தைகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அங்கன்வாடி மையத்தில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அங்கு பயிலும் குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். களியக்காவிளை அருகே மலையடி ஊராட்சிக்கு உள்பட்ட சாணி ப... மேலும் பார்க்க

களியக்காவிளையில் அதிமுக ஆா்ப்பாட்டம்

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தி, மேல்புறம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. களியக்காவிளை பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப் போராட்ட... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே மனைவியை தாக்கியதாக சிஆா்பிஎப் வீரா் கைது

கொல்லங்கோடு அருகே மனைவியை தாக்கியதாக மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎப்) வீரரை போலீஸாா் கைது செய்தனா். கொல்லங்கோடு அருகே கடவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சுனுகுமாா் (39). மத்திய ரிசா்வ் போலீஸ் பட... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். முன்சிறை பகுதியை சோ்ந்தவா் அா்ஜுனன்(30). இவரது மனைவி ஹரிஷ்மா(25). இத்தம... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே காங்கிரஸ் கொடி எரிப்பு: இளைஞா் மீது வழக்கு

பதுக்கடை அருகேயுள்ள காளியான்விளை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கொடியை தீயிட்டு எரித்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.காளியான்விளை பகுதியில் காங்கிரஸ் கொடி கட்... மேலும் பார்க்க