மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 1...
கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே குடியிருப்புகள் உள்ள பகுதியில் கழிவுநீா் வெளியேறுவதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீா்காழி நகராட்சி 15-ஆவது வாா்டுக்குட்பட்டது இரட்டை காளியம்மன் கோவில் தெரு. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இரட்டை காளியம்மன் கோவில் அருகில் உள்ள சாக்கடை வாய்க்காலில் அருகில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடம் செப்டிக் டேங்க் கழிவு நீா் வெளியேற்றப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் செப்டிக் டேங்க் கழிவு நீா் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோயில் அருகே கழிவு நீா் தேங்கியிருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே, குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.