செய்திகள் :

கழுகார்: ‘பூ’ தலைவரிடம், கதை சொல்லித் தலைவர் வைத்த கோரிக்கை டு உற்சாகத்தில் பணிவானவர்

post image

தி.மு.க-வின் இளைஞரணி சார்பில், ‘என் உயிரினும் மேலான…’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தி, மாவட்ட, மண்டல அளவில் 180 இளம் பேச்சாளர்களைத் தேர்வுசெய்திருக்கிறது தலைமை. கட்சியின் நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில், இந்த இளம் பேச்சாளர்களைப் பயன்படுத்தவும் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. முதற்கட்டமாக, மாவட்டங்களில் நடக்கும் தி.மு.க-வின் கட்சி நிகழ்ச்சிகளில் இந்த இளம் பேச்சாளர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் நிர்வாகிகள்.

அண்ணா அறிவாலயம்

இதனால், கட்சியில் தங்களுக்கான முக்கியத்துவம் மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளதாக கண்கலங்குகிறார்கள் மூத்த பேச்சாளர்கள். “கழகப் பேச்சாளர்களான எங்களுக்கு எந்த விழாக்காலத்திலும் கட்சி சார்பில், எந்த உதவியும் கிடைப்பதில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன்மூலம் கிடைக்கும் நிதியை நம்பித்தான் எங்கள் வாழ்க்கையே இருக்கிறது. ஆனால், இப்போது அதற்கும் சிக்கல் எழுந்திருக்கிறது!” என அறிவாலயத்தைச் சுற்றி புலம்பல் சத்தம் கேட்கிறது!

கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது தொடர்கதையாகி வரும் சூழலில், சோர்ந்துபோயிருக்கும் கதைசொல்லித் தலைவர், “எப்படியாவது அரசியலில் தனக்கான இடத்தை உறுதிசெய்ய, கட்சி பேதமில்லாமல் முக்கியத் தலைவர்களிடம் வலியப் போய்த் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்” எனக் கிசுகிசுக்கும் ராவணன் குடில் வாசிகள்... “இதனால், கட்சிக்குள் மேலும் அதிருப்தி அலைதான் உருவாகும் என எடுத்துச்சொல்லியும் கேட்க மறுக்கிறார்” எனப் புலம்புகிறார்கள்.

சமீபத்தில், 'பூ' கட்சித் தலைவரிடம் பேசியவர், "எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா, டெல்லில சொல்லி அந்த டெல்டா காவல்துறை அதிகாரியை மட்டும் சஸ்பெண்ட் செய்ய வெச்சுடு தம்பி..." என அன்பு கோரிக்கை வைத்திருக்கிறாராம். ‘இதெல்லாம் எங்கே கொண்டுபோய் நிறுத்துமோ தெரியவில்லை…!’ எனத் தவிப்பில் இருக்கிறார்கள் சீனியர் தம்பிகள்..!

“இரட்டை இலை விவகாரத்தில், மற்றொரு தரப்பிடமும் கருத்து கேட்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டதிலிருந்து, கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறதாம் பணிவானவர் தரப்பு. இதையடுத்து, தன் ஆதரவாளர்களிடம் பேசிய பணிவானவர் தரப்பு, “இந்த விவகாரத்தில், ‘நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வர வேண்டும். மீண்டும் கரை வேட்டி, கொடி சகிதமாக வலம்வர வேண்டும். இதெல்லாம் சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்குள் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, முக்கியக் கோவில்களில் பூஜைகள் நடத்துங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறதாம். அது மட்டுமல்ல… சமீபத்தில், தன் மருமகனுடன் டெல்லி சென்ற பணிவானவர், “இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில், தங்களுக்கு ‘நியாயமான நீதி’ கிடைக்க வழிசெய்யுமாறும்” கோரிக்கை வைத்திருக்கிறாராம். டெல்லியும் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என நம்பிக்கை கொடுத்திருக்கிறதாம். இந்தக் குஷியில், அடுத்தடுத்து மூன்று மாநாடுகளை நடத்திட தேதி குறித்திருக்கிறாராம் பணிவானவர்!

சமீபத்தில் முடிவுக்கு வந்த, வாகை சந்திரசேகரின் இயல், இசை, நாடகமன்றத் தலைவர் பதவியை, மேலும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல, செல்வப்பெருந்தகைக்குச் சட்டமன்றப் பொதுக்கணக்கு குழுத் தலைவர் பொறுப்பு கொடுத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாகவோ வேறொருவரை நியமிப்பது தொடர்பாகவோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், “பொ.க.கு.த பதவியை வழக்கமாக ஆளுங்கட்சியினர் தங்கள் கூட்டணிக் கட்சிக்குத்தான் கொடுப்பார்கள்.

செல்வப்பெருந்தகை

தற்போது மூன்றாண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்துவிட்டது. எனவே, அந்தப் பதவியை வேறொரு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்” என காங். தவிர்த்த தி.மு.க கூட்டணிக்கட்சியினர் ஆளுந்தரப்பிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். மற்றொரு புறம் “எப்படியாவது அந்தப் பதவியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள செல்வப்பெருந்தகை போராடி வருகிறார். அதற்காகத்தான் சம்பந்தமே இல்லாமல் தற்போது தி.மு.க-வுக்காக வரிந்துகட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் கதர்ச்சட்டை வட்டாரத்தில்!

தலைநகரில் செயல்படும் போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றும் மூத்த பெண் அதிகாரி சொல்வதை, ஜூனியர் பெண் அதிகாரி கேட்பதே இல்லையாம். உச்சத்தை எட்டியிருக்கும் இருவருக்குமான பனிப்போரால், பல்வேறு ஃபைல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளனவாம். ‘அதுமட்டுமல்ல, புதிதாகத் தேர்வாகியுள்ள காவலர்களுக்கான பயிற்சியிலும் அது எதிரொலிக்கிறது’ என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்த காக்கிகள்.

இது குறித்து, கல்லூரி உயரதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுசென்றும், அவராலும் இருவருக்குமான மோதலைத் தீர்க்க முடியவில்லையாம். “இப்படியே போனால், தேவையில்லாத நிர்வாகச் சிக்கல்கள் எழும். அது சீனியர் அதிகாரிக்கு மட்டுமல்ல, பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றும் எங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும்” எனப் புலம்புகிறார்கள் பயிற்சிக் கல்லூரிக் காக்கிகள்!

`உயிர் உள்ள வரையில்' - வைக்கம் பெரியார் நினைவகத்தில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலினின் படம்

கேரளாவில், வைக்கம் மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தினரும் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி 1924-ல் போராட்டம் நடைபெற்றது.இதில், பெரியார் கலந்துகொண்ட பிறகு வலிமையடைந்த இந்தப் போராட்டத்தின் விளை... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பள்ளியை இடித்துவிட்டு ரெஸ்டோ பார் கட்டுகிறோமா?’ - காங்கிரஸ் புகாருக்கு சபாநாயகர் பதில்

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``என்னுடைய தொகுதியான மணவெளி சின்ன வீராம்பட்டினத்தில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ள... மேலும் பார்க்க

குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும் கட்சியா எதிர்க்கட்சிகளா?!

குளிர்கால கூட்டத்தொடர்கடந்த நவம்பர் 25-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 20-ம் தேதி வரையில் நடக்கிறது. முன்னதாக எதிர்கட்சிகளிடம் 'அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பழுதடைந்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி; அச்சத்தில் மக்கள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூர் பகுதியில், 1வது வார்டில் அமைந்துள்ளது இந்த இடம்.இவ்விடத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதனைச் சுற்றி ஏழு ஊர்கள் அமைந்துள்ளது. இந்த ஊரில் அமை... மேலும் பார்க்க

Adani Ports: $553 மில்லியன் அமெரிக்க கடனை நிராகரித்த அதானி துறைமுகம்..! பின்னணி என்ன?

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கண்டெய்னர் முனையமாக உருவாகி வருகிறது கொழும்பு மேற்கு சர்வதேச முனையம். இந்த முனையத்தில் அதானி துறைமுகத்திற்கு 51 சதவிகிதம் பங்கு உண்டு. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம... மேலும் பார்க்க