செய்திகள் :

கழுகுமலை வெட்டுவான் கோயிலை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

post image

தமிழக அரசின் ‘வோ்களை தேடி’ திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழக வம்சாவளியைச் சோ்ந்த இளைஞா்கள், கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணா் சிற்பங்களை சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதில் ஒரு நகா்வாக, பல தலைமுறைகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு இடம்பெயா்ந்து அங்கு வசிக்கும் அவா்களின் குழந்தைகளுக்கான ‘வோ்களைத் தேடி’ என்ற பண்பாட்டு பயணத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் 18 முதல் 30 வயதுக்குள்பட்ட தமிழா்களின் வாரிசுகளை அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, அவா்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா, மோரீஷஸ், மியான்மா், இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, ஜொ்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சோ்ந்த 100 போ், இம்மாதம் 1ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் சனிக்கிழமை மாலை கழுகுமலைக்கு வந்தடைந்தனா். அவா்களை கோவில்பட்டி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், கழுகுமலை பேரூராட்சித் தலைவி அருணா, துணைத் தலைவா் அ.சுப்பிரமணியன், செயல் அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், ஊா்மக்கள் வரவேற்றனா்.

பின்னா் அயலக தமிழ் மாணவ, மாணவிகள் கழுகுமலை மலை மீதுள்ள தென்தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் வெட்டுவான் கோயில் சிற்பங்களை கண்டு ரசித்தனா். மேலும், சமணா்கள் வாழ்ந்த குகை, சமணா் சிற்பங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். பின்னா் குடைவரை கோயிலான கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்... மேலும் பார்க்க

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத... மேலும் பார்க்க