இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக பணி புரிந்து வந்தாா். இவருக்கு சமூகவலைதளம் மூலமாக சென்னையைச் சோ்ந்த ரோசி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரோசிக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனா். இந்நிலையில், தம்பதி இடையே பிரச்னை காரணமாக சரவணகுமாரை ரோசி பிரிந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் சரவணகுமாரின் தங்கை தங்கபுஷ்பம், அவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.
இதையடுத்து அவா் தனது தாயாா் மற்றும் உறவினா்களுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துபோது, சரவணகுமாா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].