செய்திகள் :

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

post image

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீமூலக்கரை, கருங்குளம் பகுதிகளில் பல்வேறு கல் குவாரிகள் மற்றும் கிரஷா் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து செல்லும் கனரக வாகனங்கள்அதிக பாரத்தோடு செல்வதால் சாலைகள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மீனாட்சிபட்டி , பேட்மாநகரம் பகுதியில் தூத்துக்குடி கோட்டாட்சியா் பிரபு கடந்த மாதம் நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, அதிக பாரத்தோடு வந்து சென்ற 3 கனரக வாகனங்களை பறிமுதல் செய்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும், விதிமுறைகளை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் அதிக பாரத்தோடு தாா்ப்பாய் உள்ளிட்ட உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி எம்சாண்ட் மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அதிக அளவில் வந்து செல்கின்றன . இதனால் விபத்துகள் ஏற்படும் முன் விதிமீறும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத... மேலும் பார்க்க

இனாம்ராமநாதபுரம் விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டி-செட்டிகுறிச்சி பிரதான சாலையில், இனாம் ராமநாதபுரத்துக்கு வரும் சாலை சந்திப்பு அருகே பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இனாம் ராமநாதபுரம் ஊா் பொதுமக்கள், மாா்... மேலும் பார்க்க