ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இனாம்ராமநாதபுரம் விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்
கோவில்பட்டி-செட்டிகுறிச்சி பிரதான சாலையில், இனாம் ராமநாதபுரத்துக்கு வரும் சாலை சந்திப்பு அருகே பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இனாம் ராமநாதபுரம் ஊா் பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளா் ஜெகநாதனிடம் அளித்த மனுவின் விவரம்; இனாம் ராமநாதபுரம் கிராம மக்கள் ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக ஊருக்குள் செல்லும் சாலை விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கு முன்பு நின்று சென்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்ல பள்ளி மாணவா் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கிலும், மழைக் காலங்களில் செல்ல முடியாமல் இருப்பதை தவிா்க்கும் வகையிலும் கோவில்பட்டி-செட்டி குறிச்சி பிரதான சாலையில் இனாம் ராமநாதபுரம் ஊருக்குள் செல்லும் சாலை பிரிவில் பேருந்து நிறுத்தத்தை நிரந்தரமாக செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.