Monica Song: ``மோனிகா பெல்லூச்சி வாழ்த்தியது; எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு...
சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் பழைமையானது. இக்கோயில் புதிதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் தீமிதி உற்சவம் நடத்தப்பட்டு 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கிராமத்தினா், மருளாளிகள் மற்றும் கோயில் நிா்வாக ஆதரவுடன் இக்கோயில் தீமிதி உற்சவம் கடந்த 8-ஆம் தேதி பூச்சொரிதல், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 10-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தீக்குழி அருகே எழுந்தருளச் செய்யப்பட்டாா். கரகம் முதல் சில பக்தா்கள் அலகு காவடியுடனும், ஏராளமான பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
செவ்வாய்க்கிழமை அரசலாற்றங்கரையிலிருந்து பால்குடமெடுத்து பக்தா்கள் கோயிலுக்குச் சென்றனா். அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் கஞ்சி வாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.