ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.
திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவரான அம்பாள் சம்ஹார கோலத்தில் அருள்பாலிக்கிறாா். ஆடி, தை மாத செவ்வாய்க்கிழமைகளில் இக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பத்ரகாளியை வழிபட்டனா். அபிஷேக மண்டபத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடனமக ஆடு, மாடு, கோழிகளை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.
கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை லட்சாா்ச்சனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. முன் பதிவு செய்துகொண்ட பக்தா்கள் காலை முதல் இரவு வரை நடைபெற்ற இவ்வழிபாட்டில் பங்கேற்றனா். இம்மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆக. 15-ஆம் தேதி சுமாா் 2,500 பக்தா்கள் பங்கேற்கும் திருவிளக்கு வழிபாடு நடைபெறவுள்ளது.