செய்திகள் :

Monica Song: ``மோனிகா பெல்லூச்சி வாழ்த்தியது; எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு'' - பூஜா ஹெக்டே

post image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கூலி' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில், நடிகை பூஜா ஹெக்டே 'கூலி' படத்தின் 'மோனிகா' பாடல் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

Pooja Hegde
Pooja Hegde

'Marrakech' திரைப்பட விழாவின் இயக்குநர் மெலிதா டஸ்கன், உலகளவில் மிகவும் பிரபலமான இத்தாலியைச் சேர்ந்த நடிகை மோனிகா பெல்லூச்சியின் நெருங்கிய நண்பர்.

ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்தியப் பதிப்பின் ஆசிரியரான அனுபமா சோப்ரா, 'மோனிகா' பாடலை இயக்குநர் மெலிதாவுக்கு அனுப்பியதாக இந்த நேர்காணலில் பூஜா ஹெக்டேவிடம் தெரிவித்தார்,

'மோனிகா' பாடலைப் பார்த்த மெலிதா டஸ்க்ன் அந்த லிங்க்கை மோனிகா பெல்லூச்சிக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை கேட்ட மோனிகா பெல்லூச்சி, அவருக்கு அந்தப் பாடல் பிடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை நடிகை அனுபமா சோப்ரா இந்த நேர்காணலில் பூஜா ஹெக்டேவிடம் கூறினார்.

Monica Belluci
Monica Belluci

இதனை அறிந்த பூஜா ஹெக்டே, “மோனிகா பெல்லூச்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நடித்த பாடலை அவர் ரசித்து வாழ்த்தியது எனக்கு மிகப்பெரிய விஷயம். எனக்குக் கிடைத்தப் பாராட்டுகளிலேயே மிகப்பெரியது இதுதான். இது எனக்கு ஒரு ஆனந்தமான செய்தி.” என்றார் நெகிழ்ச்சியுடன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Coolie: "தனக்கே உரிய ஸ்டைலால்..." - சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்; இபிஎஸ் வாழ்த்து

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹ... மேலும் பார்க்க

`தேர்தல் நேரத்தில் ரவீனா என்கிட்டே 'உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு'னு சொன்னாங்க!' - நவீந்தர் பேட்டி

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. சீரியல் நடிகர் பரத் தலைமையிலான சின்னத்திரை வெற்றி அணிக்கு இந்த தேர்தலில் அபார வெற்றி கிடைத்திருக்கிறது. தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயல... மேலும் பார்க்க

Pooja Hegde: ``எல்லை மீறி விமர்சனங்கள்; பணம் கொடுத்தால் அகற்றுவோம் என்கிறார்கள்!'' - பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே சமீபத்தில் சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 'கூலி' திரைப்படத்தில் 'மோனிகா' பாடலில் நடனமாடி டாக் ஆஃப் தி டவுனாக மாறிய... மேலும் பார்க்க

Lawrence: ``அண்ணனை மாதிரி மக்கள் சேவை செய்யணும்!'' - ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் பேட்டி

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரரான எல்வின் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். 'டைரி' பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கும் 'புல்லட்' திரைப்படத்தில்தான் தற்போது கதாநாயகனாக எல்வின் நடித்திர... மேலும் பார்க்க

Coolie: '9 AM டு 2 AM' - ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி திரையரங்குகளில் ஒருநாள் மட்டும் 5 காட்சிகள் ஒளிபரப்பாகும்.நாளை மற... மேலும் பார்க்க