செய்திகள் :

`பாரிஸில் தெரு நாய்களை நீக்கியபோது என்ன நடந்தது?' - மேனகா காந்தி சொன்ன வரலாறு!

post image

உச்ச நீதிமன்றம் டெல்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் தெருக்களில் உள்ள நாய்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி, காப்பகங்களில் பாதுகாக்க அறிவுத்தியிருப்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

டெல்லி, குருகிராம், நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் உள்ள பொது இடங்களில் இருந்து அனைத்து தெருநாய்களையும் உடனடியாக அகற்ற உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) உத்தரவிட்டது.

பலரும் இது சாத்தியமற்றது, நடைமுறைக்கு ஒத்துவராதது எனத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

Maneka Gandhi
Maneka Gandhi

அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்குகள் நல ஆவலருமான மேனகா காந்தி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 'நிதி ரீதியாக லாபகரமானது அல்ல', 'நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல' மற்றும் 'சுற்றுசூழல் சமநிலையை பாதிக்கக் கூடியது' எனக் கூறியிருந்தார்.

அத்துடன் ஒரு வரலாற்றுப் பாடத்தையும் எடுத்துக்கூறியிருக்கிறார்.

தெருக்களில் நாய்கள் இல்லாமல் போகும்போது குரங்குகள் சூழ்ந்துகொள்ளும் என்றும் நாய்களையும் பூனைகளையும் நீக்கிவிட்டால் எலிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறிய அவர், 1880-ல் பாரிஸ் நகரில் நாய்களையும் பூனைகளையும் அப்புறப்படுத்தியபோது அவர்கள் எலித்தொல்லையால் அவதிப்பட்டதாகக் கூறியுள்ளார்.

Paris
Paris

பாரிஸில் நடந்தது என்ன?

1800-களில் நாய்கள் ஆபத்தான ரேபிஸ், உன்னி மற்றும் அழுக்குகளைப் பரப்பும் விலங்குகளாகப் பார்க்கப்பட்டன. தெருக்களில் இருந்த பெருமளவிலான நாய்கள் தூய்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதியது அரசு.

பிரஞ்சு தலைநகரை நவீனமாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் நோக்கில் பெருமளவில் நாய்களும் பூனைகளும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

'தெருநாய்களும் நவீன பாரிஸின் உருவாக்கமும்' என்ற ஆய்வு கூறுவதன்படி, 1883-ல் நாய்களைக் கொல்லும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அந்த காலத்தில் குதிரை வண்டிகளே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. குதிரைகளை நாய்கள் அச்சுறுத்துவதால் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி எமிலி காப்ரான் என்ற மருந்து தயாரிப்பவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆனால் விலங்குகள் குறைந்ததால் கழிவு நீர் கால்வாய்களிலும் பொந்துகளிலும் இருந்த எலிகள் பெருகி வீடுகளுக்குள் வர ஆரம்பித்திருக்கின்றன. நியூயார்க் முதல் லண்டன் வரை உலகின் தலை சிறந்த நகரங்கள் எல்லாம் எலிகளைக் கட்டுப்படுத்த திண்டாடியிருக்கின்றன என்பதை வரலாற்றில் அறிய முடியும். சில நகரங்கள் எலிகளைக் கொல்ல தனித்த திட்டங்களை முன்னெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோலெக்ஸ் நிறுவனர் ஹான்ஸ், ஹிட்லரின் உளவாளியா? - வெளியானஅறிக்கை; இங்கிலாந்தில் அதிர்ச்சி!

பிரபல ரோலக்ஸ் கடிகார பிராண்டின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப், ஹிட்லரின் ஆட்சிக்கு ஆதரவு கொண்டிருந்ததாகவும் நாஜி உளவாளியாக இருந்ததாகவும் தி டெலிகிராஃப் அறிக்கை கூறுகிறது. பிரபலங்கள் தொடங்கி பணக்காரர்க... மேலும் பார்க்க

பண்டைய காலத்தில் கோதுமையை வைத்து கண்டறியப்பட்ட கர்ப்பம்; எப்படி நடந்தது இந்த சோதனை?

நவீன கர்ப்ப பரிசோதனை கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இயற்கை பொருட்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை பயன்படுத்தி கர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர். நவீன கருவிகள் இல்லாம... மேலும் பார்க்க

ஆதிச்சநல்லூர்: 'நம்ம நாகரிகத்தை நாமே பேசலன்னா... யாரு பேசுவா?'- கவனம் ஈர்க்கும் ஆன் சைட் மியூசியம்

ஆசிய கண்டத்தில் சைனாவிற்கு பிறகு இந்தியாவில் முதன்முதலில் ஆன் சைட் மியூசியமா..? ஆன் சைட் மியூசியம் என்றால் என்ன? தமிழில் தள அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் ஆன் சைட் மியூசியம் என்பது ஒரு வரலாற்று அ... மேலும் பார்க்க

ஆதிச்சநல்லூர்: ``எலும்புக்கூடு நெற்றியில் ஓட்டை இருக்க இதுதான் காரணம்'' -முத்தாலங்குறிச்சி காமராசு

பொருநைப் பூக்கள், பொதிகை மலை அற்புதங்கள், தாமிரபரணி கரை சித்தர்கள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என்று பல்வேறு ஆய்வு நூல்களை எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு பாளையங்கோட்டையில் உள... மேலும் பார்க்க

மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுகாக்குமா தமிழக அரசு?

தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றைச் சொல்லும் கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்களையும், மதுரை மாவட்டத்தில் சங்க கால சின்னங்களையும், சமணத் தடங்களையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.கொங்கர் புளியங்குளம்... மேலும் பார்க்க