சீல்ஸ் 6 விக்கெட்டுகள், ஹோப் 120..! 34 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வென்ற மே.இ.தீவு...
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்
கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதற்கிடையே, புதன்கிழமை (ஆக. 13) மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி(புயல் சின்னம்) உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்.
இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, ஆகஸ்ட் 15 வரை மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 16 வரை தெற்கு வங்க மாவட்டங்களில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.