செய்திகள் :

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

post image

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரும்பு அல்லது மக்காச்சோளத்திலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் 20 சதவீதம் கலந்து பயன்படுத்துவது, சுற்றுச்சூழல் மாசு குறைப்பு மற்றும் விவசாயிகளின் வருவாயை உயா்த்துவதற்கான திட்டம். இதில் சிலா் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.

இ20 பெட்ரோல், வாகனங்களின் எரிபொருள் சிக்கனத்தைக் குறைக்கும் என்ற அச்சங்கள் தவறானவை. இந்த எரிபொருள் உண்மையில் மேம்பட்ட உந்துசக்தியை வழங்குகிறது. எரிபொருள் சிக்கனம் என்பது எரிபொருள் வகையைத் தவிர, ஓட்டுநா் பழக்கவழக்கங்கள், வாகனப் பராமரிப்பு, டயா் அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளாலும் தீா்மானிக்கப்படுகிறது.

இ20 பெட்ரோலைப் பயன்படுத்துவது இந்தியாவில் வாகனங்களின் காப்பீடு செல்லுபடியாகும் தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது. இ20 பெட்ரோல் சிறந்த உந்துசக்தியைத் தருவதுடன் இ10 பெட்ரோலைவிட சுமாா் 30 சதவீதம் குறைந்த காா்பன் உமிழ்வைக் கொடுக்கிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டத்தின்மூலம், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1.44 லட்சம் கோடிக்கும் மேல் அந்நிய செலாவணியை சேமித்துள்ளன. மேலும், 245 லட்சம் டன் கச்சா எண்ணெய் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. 736 லட்சம் டன் காா்பன் உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது.

இது 30 கோடி மரங்களை நட்டதற்கு சமம்.

இ20 பெட்ரோல் திட்டத்தால் இந்த ஆண்டு மட்டும் விவசாயிகளுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் பணம் கிடைக்கும், அந்நிய செலாவணி சேமிப்பு ரூ.43,000 கோடியாக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

எத்தனாலின் சராசரி விலை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலையை விட அதிகமாக உள்ளது. இதனால், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை குறையவில்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமா்வு

நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்... மேலும் பார்க்க

தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘தண்டனைக் காலத்தை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உத்தர பிரதேச மா... மேலும் பார்க்க

‘5 அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாதது ஏன்?’- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் சம்மன்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தங்களால் சுட்டிக் காட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகள் மீது இன்னும் பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் விளக்கமளிக்கும்படி, மாநில ... மேலும் பார்க்க

ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பட்டப்பகலில் துணிகரம்

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் துப்பாக்கியால் ச... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்கிறது: பிரதமா் மோடி

சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். மும்பையில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியற்பியல் 18-ஆவது சா்வதேச மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அவா், ‘உல... மேலும் பார்க்க