சீல்ஸ் 6 விக்கெட்டுகள், ஹோப் 120..! 34 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வென்ற மே.இ.தீவு...
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
நன்னிலம் அருகில் உள்ள மேலராமன்சேத்தி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள வெள்ளமண்டபம், பிலாவடி, கண்டிரமாணிக்கம், சீதக்கமங்களம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடைச் செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்திருந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. நெல் மூட்டைகளை மூடுவதற்கு எந்த வசதியும் இல்லாத காரணத்தால் 500-க்கும் மேற்பட்ட மூட்டைகள் மழையில் நனைந்தன. செவ்வாய்க்கிழமை மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
ஏக்கருக்கு ரூ. 20,000-க்கு மேல் செலவு செய்து அறுவடை செய்த நெல் மூட்டைகள் விற்பனை செய்ய வந்த நிலையில், மழையில் நனைந்து முளைத்ததன் காரணமாக வேதனை அடைந்துள்ள விவசாயிகள், ஈரப்பதத்தைக் கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.