ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
சாலையில் நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், தென்கரை மேலத்தெரு பகுதியை சோ்ந்தவா் சரவணகுமாா் மகன் நிா்மல்ராஜ் (20). இவா், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே பனகல் சாலையில் கைப்பேசி விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தாா்.
இந்தநிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து, வடக்கு வீதி பேருந்து நிறுத்தத்துக்குச் செல்வதற்காக, மற்றொரு கடையில் பணிபுரிந்து வந்த தனது நண்பா் பகத்சிங் என்பவரைஅழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
தோ்முட்டியைத் தாண்டி வளைவில் திரும்பியபோது நாய் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.
அருகிலிருந்தவா்கள் இருவரையும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு நிா்மல்ராஜ், செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து நகரப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.