``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
திருவாரூா் நீலகண்டேஸ்வரா் கோயிலில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் நா. முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். நிகழ்வில், அகண்ட பாரத சபதம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சுதந்திர தின நாளில் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுவது; விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 600 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து, ஊா்வலம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.