செய்திகள் :

Maitreyan: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்? - முன்னாள் எம்.பி., மைத்ரேயன் விளக்கம்

post image

அதிமுக முன்னாள் எம்பி-யான மைத்ரேயன் இன்று (ஆகஸ்ட்13) அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைத்திருக்கிறார்.

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மைத்ரேயன், "தளபதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கட்சிக்காக என்னால் இயன்ற பணிகளையும், முயற்சிகளையும் செய்வேன். அதிமுக-வின் போக்கு சரியாக இல்லை. பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

மைத்ரேயன்
மைத்ரேயன்

அந்தக் கூட்டணியை அறிவித்ததே அமித்ஷாதான். அதுமட்டுமின்றி அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லியிருக்கிறார். எந்த அடிப்படையிலும் அவர்களுடன் ஒருமித்த கருத்து வராது. அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. பல்வேறு நிர்வாகிகள் அங்கு மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள்.

எனக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனால்தான் அதிமுகவிலிருந்து விலகினேன். 2026 தேர்தலில் யாருக்கு 2-வது இடம் என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம் நம்பர் ஒன் ஆக உள்ளது. 2026-ல் திமுக ஆட்சி அமைப்பது உறுதி" என்று கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட தலைமை மோதலால் மைத்ரேயன் பாஜக-வில் இணைந்தார். பாஜக-வில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இணைந்தார். ஆனால், அவருக்கு அங்கு எதிர்பார்த்த அளவு பொறுப்புகளோ, பதவியோ கிடைக்கவில்லை.

மைத்ரேயன்
மைத்ரேயன்

இதனால், பாஜக மீது அதிருப்தி அடைந்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தார். இந்தச் சூழலில், அதிமுக-வில் இருந்து விலகி இன்று மைத்ரேயன் திமுகவில் இணைகிறார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக-வின் முன்னாள் எம்பியான அன்வர் ராஜா அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். தற்போது மற்றொரு முன்னாள் எம்பி-யும் திமுக-வில் இணைய இருப்பது அதிமுக-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அவசர ஆலோசனையில் கே.என். நேரு, சேகர் பாபு; அதிகரிக்கப்படும் காவலர்கள்! - ரிப்பன் பில்டிங் அப்டேட்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பொதுநல வழக்கு ஒன்றில், போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணி... மேலும் பார்க்க

மைத்ரேயன்: திமுக-வில் இணைந்த RSSகாரர்- ஓயாத கட்சித் தாவலின் பரபர பின்னணி

ஆர்.எஸ்.எஸ் டு தி.மு.கஅ.தி.மு.க முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தி.மு.க உறுப்பினர் அட்டைய... மேலும் பார்க்க

தனுஷ்கோடி: இந்திய விசா மறுப்பு; காதலனுக்காகச் சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை பெண்; போலீஸ் விசாரணை

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நேற்று அதிகாலை இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீஸாருக்குத் தகவல் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற கடலோரப் பா... மேலும் பார்க்க

'எங்களைக் காப்பாற்றுங்கள் முதல்வரே....' - உழைப்போர் உரிமை இயக்கத்தின் உருக்கமான கடிதம்

தனியார்மயத்தை எதிர்த்து சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 13 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியி... மேலும் பார்க்க

'இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி யார்?' - பரபர டெல்லி அரசியல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள், 'பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்' என தீர்மானம் கொண்டுவ... மேலும் பார்க்க