கயல் தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்! இனி பிரபல பாடகர் நடிப்பார்!
பொன் விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார்! - கூலி வெற்றிபெற இபிஎஸ் வாழ்த்து!
கூலி திரைப்படம் வெற்றிபெற நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளது.
இதில், நாகார்ஜுனா, ஆமிர்கான், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் படம் எல்சியு(லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்)வில் இருக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில், கூலி திரைப்படம் வெற்றிபெற ரஜினிகாந்துக்கு அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் அவரது நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.